நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, அவரின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கும் நேற்று முதல் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிடும் வகையில் காவல்துறை மா அதிபருக்கும், பிரதி மா அதிபருக்கும் கடிதம் அனுப்பியிருந்ததாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அந்தக் கடிதத்தைத் தொடர்ந்து அவருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, பொறுப்பான மற்றும் நேர்மையானவர்களைத் தேர்வு செய்தால், அவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இன்றி காவல்துறை போதுமான பாதுகாப்பை வழங்கும் என்பதையும் அமைச்சர் ஆனந்த விஜேபால வலியுறுத்தினார்.