(ஒலுவில் செய்தியாளர்)
கிழக்கு மாகாண ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் நேற்று (25.10.2025) கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், மாகாண கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஆதம்பாவா மற்றும் ரொசான் அக்மீமனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வலயச் செயலாளர்களும் பங்கேற்றனர்.
கிழக்கு மாகாண ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் கல்வி, நிர்வாக மற்றும் நலன்சார் பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இந்நிகழ்வில் இடம்பெற்றன.