Top News
| இலங்கையின் 49வது பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன நியமனம் | | உலக நம்பிக்கை பெற்ற தலைவர்களில் முதல் இடம் யாருக்கு? | | அக்கரைப்பற்று பொதுச் சந்தை சுத்தம் செய்யும் பணி ஆரம்பம் |
Jul 27, 2025

அக்கரைப்பற்றில் அதாஉல்லா மேயராக பதவியேற்பு

Posted on June 2, 2025 by Admin | 123 Views

அக்கரைப்பற்றில் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முக்கிய வெற்றியைப் பெற்ற தேசிய காங்கிரஸ், இன்று (ஜூன் 2) உத்தியோகபூர்வமாக ஆட்சி அமைத்தது. இதனூடாக, அக்கரைப்பற்றில் மூன்றாவது முறையாக அந்தக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கின்றது.

இந்நிகழ்வின் முக்கியமான அங்கமாக, தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள், அக்கரைப்பற்றின் மாநகர மேயராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இதனையடுத்து, அக்கரைப்பற்று மற்றும் அதனைச் சூழ்ந்த பிரதேச சபைகளுக்கு தெரிவாகிய உறுப்பினர்கள் அனைவரும், அதாஉல்லா அவர்களின் தலைமையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்நிகழ்வு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் பங்கேற்றனர்.