Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

சம்மாந்துறை முன்னாள் உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மதின் மறைவுக்கு ரிஷாட் பதியுதீனின் அனுதாபச் செய்தி

Posted on June 2, 2025 by Admin | 309 Views

சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஏ.அச்சு முஹம்மட் (நைப்) அவர்கள் மதீனாவில் ஹஜ் கடமையில் ஈடுபட்டிருந்தபோது இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவு குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவருக்கு அனுதாபம் தெரிவித்து உரை வெளியிட்டுள்ளார்.

“ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைக்கும்” என்பது இறைவனின் கட்டளை என்பதை நினைவுபடுத்திய அவர், அன்னாரின் சமூக சேவைகள், கல்விக்காகச் செய்த பங்களிப்பு மற்றும் அரசியல் ஈடுபாடு, அனைத்தும் நினைவுகூரத்தக்கவை என தெரிவித்தார்.

ஏ.அச்சு முஹம்மத், ஆசிரிய ஆலோசகராகவும், சமூகநல ஆர்வலராகவும், சம்மாந்துறை பிரதேச மக்கள் மத்தியில் மதிப்புக் பெற்ற நபராக இருந்ததாகவும், இளைஞர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் செயற்பட்டவர் எனவும் ரிஷாட் குறிப்பிட்டார்.

அன்னாரின் மறைவு சம்மாந்துறை மண்ணுக்கும், மக்கள் நலனுக்குமான பணி ஒன்றுக்கும் பேரிழப்பாகும் என தெரிவித்த அவர், அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

இறுதியாக, அன்னாரின் நற்பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொண்டு, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற மேலான சுவனப் பதவியை அருள்வானாக எனவும் அவர் பிரார்த்திக்கிறார்.