Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

தேசிய லொத்தர் சபை முன்னாள் அதிகாரி மீது நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் இருவர் கைது

Posted on June 3, 2025 by Admin | 122 Views

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லொலுவவின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேற்று (ஜூன் 2) கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்கள் இன்று (ஜூன் 3) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

நாரஹேன்பிட்டி – கிரிமண்டல மாவத்தை பகுதியில் கடந்த மே 17ஆம் தேதி இரவு, துசித ஹல்லொலுவ தனது காரில் பயணித்துக்கொண்டு இருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரின் வாகனத்தை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

சம்பவத்தையடுத்து, அவர்கள் வாகனத்திலிருந்த சில முக்கிய கோப்புகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, கடவத்தை மற்றும் கணேமுல்ல பகுதிகளில் வைத்து கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகள் தொடருகின்றன.