Top News
| ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு | | அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து இருந்து ஓய்வு | | ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் ஜெர்மனிக்கு |
May 23, 2025

கொழும்பில் கனமழை தாக்கம்: 20க்கும் அதிகமான பகுதிகள் வெள்ளத்தில்

Posted on May 18, 2025 by Hafees | 58 Views

கொழும்பில் கனமழை காரணமாக 20க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது

கொழும்பில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்ததால், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை நீர் வெள்ளமாக குவிந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, நீர் வடிகாலமைப்புகளுக்கு அருகில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் என மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.

வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆமர் வீதி மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தை உள்ளிட்ட பகுதிகள் குறிப்பிடப்படுகின்றன. தற்போதைய நிலைமைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், மீள்சீரமைப்பு பணிகளும் தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்நிலையில் தொடரும் வெள்ள அபாயங்களை தவிர்க்கும் வகையில், நீர் ஓட்ட பாதைகளில் உள்ள தடைகள் அகற்றப்பட்டு வருவதாகவும் மாநகர சபை அறிவித்துள்ளது.