Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அம்பாறை நாமல்தலாவவில் வெசாக் இறுதி நாள் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது

Posted on May 18, 2025 by Admin | 265 Views

(அபூ உமர்)

அம்பாறை, நாமல்தலாவ பிரதேசத்தில் உள்ள ஷைலபிம்பாராம மகா விகாரையில் வெசாக் பண்டிகையின் இறுதி நாள் நிகழ்வு நேற்று(17.05.2025) வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அரசியல் மற்றும் சமூக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இதில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம். எஸ். உதுமாலெப்பை, முன்னாள் அமைச்சர் விமல வீர திசாநாயக்க, தேசிய ஜனநாயக முன்னனி கட்சியின் தலைவர் ரொஷான் மலிந்த, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உச்சபீட உறுப்பினர் ஏ.சி. சமால்தீன், தொழிலதிபர் ஏ. கே. அமீர், அம்பாறை பிரதேச செயலாளர் திரு. திலினுடன் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.

வெசாக் விழாவின் இறுதி நாள் நிகழ்வாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு அமைதியான சூழலில் நடைபெற்றது.