கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்குச் செல்லுவது உறுதியடைந்துள்ளதாக ஆளுங்கட்சியுடன் நெருக்கம் உள்ள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய தகவல்களின்படி, மாநகர சபைக்குத் தெரிவாகியுள்ள 63 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், வருகிற ஜூன் 2ஆம் திகதி, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த விராய் பல்தசார், கொழும்பு மாநகர மேயராகப் பதவியேற்பார் என நம்பப்படுகிறது.
எதிர்க்கட்சிகளுக்குள் முரண்பாடுகள்: சஜித்தின் பிடிவாதம் தடையாகும்
மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் உறுதியான நிலைப்பாடு, இந்த முயற்சிக்கு தடையாக உருவானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.