Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் – கொழும்பு ப்ளூமெண்டலில் பரபரப்பு

Posted on May 18, 2025 by Admin | 460 Views

கொழும்பு ப்ளூமெண்டல் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மே 18 பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இந்த சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து, உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.