Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

Posted on May 19, 2025 by Hafees | 284 Views

படலந்த ஆணைக்குழு அறிக்கையை சட்டரீதியாக ஆய்வு செய்ய சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க நான்கு பேர் கொண்ட விசேட குழுவை நியமித்துள்ளார்.

இந்த குழு, மூத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய தலைமையில் செயற்படவுள்ளது.

குழுவில் இணைந்துள்ள மற்ற உறுப்பினர்கள்:

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்
சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஜயனி வெகடபொல
அரசாங்க சட்டத்தரணி சக்தி ஜாகொடஆராச்சி

குழுவின் பிரதான பொறுப்புகள்:

படலந்த ஆணைக்குழு அறிக்கையின் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் சாத்தியம் உள்ளதா என்பதை ஆராயும்.
காலாவதியான குற்றங்களை அடையாளம் காண்பதும் குழுவின் வேலைப்பாடுகளில் ஒன்றாகும்.


இந்த ஆணைக்குழு அறிக்கை, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் அடிப்படையில், சமீபத்தில் ஜனாதிபதி செயலகத்தால் சட்டமா அதிபரிடம் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.