Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

பாதாள உலக துப்பாக்கிச் சூடுகளில் அரசியல் தலையீடு பாதுகாப்பு அமைச்சர் வாக்குமூலம்

Posted on May 20, 2025 by Hafees | 358 Views

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான துப்பாக்கிச் சூடுகளில், அரசியல் தலையீடுகள் உள்ளமை புலனாய்வுத் தகவல்களில் இருந்து உறுதியாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜெபால இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூடுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதியின் பெயர் விரைவில் அம்பலமாகும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜெபாலக் கூறியுள்ளார்.