Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

18 இலட்சம் ரூபா வருமானத்திற்கு மேல் பெறுவோருக்கு வரி 10% வீதம் ஆக உயர்வு

Posted on May 20, 2025 by Hafees | 190 Views

2024 ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், வருடாந்தம் 18 இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானம் பெறுவோருக்கு விதிக்கப்படும் நிறுத்தி வைத்தல் வரி (Withholding Tax) 5% இலிருந்து 10% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, குறைந்த வருமானம் பெறுவோர் மீது இத்தகைய வரி பொறுப்பை ஏற்படுத்தாமல் இருக்க, சுய பிரகடனத்தை சமர்ப்பிக்க புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வங்கிக் கணக்குகள் திறக்கும் பொழுது வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) வழங்குவதையும் கட்டாயமாக்கஉள்நாட்டு வரிவிதி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் மந்திரிசபை அனுமதி வழங்கியுள்ளது.