Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கத்தினர் நடவடிக்கைகள்

Posted on May 21, 2025 by Inshaf | 143 Views

நாடு முழுவதும் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – ஆண்டு இறுதிக்குள் ஆட்சேர்ப்பு திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

நாடு முழுவதும் தற்போது சுமார் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகவும், இந்த ஆண்டு முடிவிற்கு முன்னர் குறைந்தது ஒரு பகுதியையாவது நிரப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், பிரதமர் கூறியதாவது: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை: சிங்கள ஆசிரியர் வெற்றிடங்கள் – 4,240 தமிழ் ஆசிரியர் வெற்றிடங்கள் – 2,827ஆறு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை: சிங்கள ஆசிரியர் வெற்றிடங்கள் – 11,274 தமிழ் ஆசிரியர் வெற்றிடங்கள் – 6,121மேல் மாகாணத்தில் மட்டும்: சிங்கள ஆசிரியர் வெற்றிடங்கள் – 2,635 தமிழ் ஆசிரியர் வெற்றிடங்கள் – 699வெற்றிடங்களை நிரப்புவதற்காக அரசாங்க சேவை ஆணைக்குழு பரிந்துரைகள் வழங்கியுள்ளது. இதற்கமைய, பரீட்சை முறை மூலம் ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறும். மேலும், பட்டதாரி நபர்களை ஆசிரியராக நியமிக்கக் குறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இவ்வளவான சிக்கல்களுக்கு மத்தியில், 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சமாக ஒரு பகுதியை ஆட்சேர்ப்பு செய்வதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.