Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இந்தியாவிலிருந்து 3,050 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி இலங்கைக்கு

Posted on May 21, 2025 by Hafees | 395 Views

நாட்டில் உருவாகியுள்ள உப்புத் தட்டுப்பாட்டை சமாளிக்கும் முயற்சியாக, இந்தியாவிலிருந்து 3,050 மெட்ரிக் தொன் உப்பு இன்றிரவு (மே 21) இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது நாட்டின் உப்புத் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு பரந்த நடவடிக்கையாகும். இலங்கையின் மாதாந்திர உப்புத் தேவை சுமார் 15,000 மெட்ரிக் தொன்களாகவும், ஆண்டுத் தேவை 180,000 மெட்ரிக் தொன்களாகவும் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.