Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

தென்மேற்கு பருவமழை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Posted on May 21, 2025 by Hafees | 457 Views

தென்மேற்கு பருவமழை தொடரும் – சில பகுதிகளில் பலத்த மழையும் காற்று வீச்சும் – பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை நிலைபெற தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள், காலி, மாத்தறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல், சப்ரகமுவ, புத்தளம், நுவரெலியா, கண்டி உள்ளிட்ட பகுதிகளில் 50 மில்லி மீட்டருக்கும் மேற்பட்ட பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய, ஊவா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, தென் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்று ஆகியவற்றால் ஏற்படக்கூடிய அபாயங்களை தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் நடந்து கொள்ள வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.