Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

 அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிரான கண்டனப் பேரணி

Posted on May 22, 2025 by Admin | 230 Views

(ஹபீஸ்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளதாக கூறப்படும் போலியான குற்றச்சாட்டுகளை கண்டித்தும், சீரான வைத்திய சேவைகளை பாதிக்கும் முயற்சிகளுக்கு எதிராகவும், இன்று (22 மே 2025) வியாழக்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

இந்த பேரணியில், வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். பேரணியின் போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அக்கரைப்பற்று கிளை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை எனவும், அவை வைத்தியசாலையின் நடைமுறைகளில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டது.

மேலும், சில வைத்திய அதிகாரிகளின் பின்னணியில் முன்னெடுத்துள்ளதாக கூறப்படும் பிரசார நடவடிக்கைகள் மருத்துவ சேவையின் இயல்புநிலையை பாதிக்கும் வகையில் இருப்பதைக் கண்டித்து, இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பொதுமக்கள் நலனுக்காக இயங்கும் அக்கரைப்பற்று வைத்தியசாலையின் சீரான செயல்பாடு தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பேரணியில் வலியுறுத்தப்பட்டதுடன் போலியான குற்றச் சாட்டுகளினை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று(21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.