Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

பாராளுமன்ற ஊழியர்களின் உணவுக் கட்டணம் அதிகரிப்பு

Posted on May 22, 2025 by Arfeen | 237 Views

நாடாளுமன்ற ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணத்தை உயர்த்தும் தீர்மானம் நாடாளுமன்ற அவைக் குழுவால் ஏற்கப்பட்டுள்ளது.இந்தப் புதிய தீர்மானத்தின் அடிப்படையில், நிர்வாக அதிகாரிகளுக்கான மாத உணவுச் செலவு ரூ.1,500 இருந்ததை ரூ.4,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பொது ஊழியர்களுக்கான உணவுக் கட்டணமும் ரூ.1,000 இலிருந்து ரூ.3,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.தற்போது நாடாளுமன்றத்தில் சுமார் 1,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கு முன், நாடாளுமன்றத்தின் மொத்த உணவுச் செலவுகள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பிரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.