இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இன்று மேற்கொண்ட நடவடிக்கையில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், 4 மில்லியன் ரூபாய் பெறுமானமான இலஞ்சம் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மூவரும் எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது