2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் மூன்று உறுப்பினர்கள் தற்போது வெற்றிபெற்றுள்ளனர்.
தீகவாபி வட்டாரத்தில், மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுத்த உறுப்பினராக MLA.Saman வெற்றி பெற்றுள்ளார். அதோடு, பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில், பட்டியல் மூலம் இரண்டு பெண்கள் CM.ஜனுசா (Janusa) மற்றும் S. பஹீமா (Fahima) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வெற்றியுடன், தேசிய மக்கள் சக்தி (NPP), அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தனது பலத்தை நிலைநிறுத்தி, எதிர்கால நடவடிக்கைகளுக்கு முன் நகரும் வாய்ப்பை பெற்றுள்ளது.