Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

இந்தியாவிலிருந்து உப்பினை இறக்குமதி செய்யும் செயற்பாடு முன்னெடுப்பு

Posted on May 25, 2025 by Inshaf | 241 Views

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செயல் ஆரம்பம் – உப்பு பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முயற்சிநாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து உப்பை அரசாங்கத்தின் சார்பில் இறக்குமதி செய்யும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால தெரிவித்ததாவது, கடந்த வியாழக்கிழமை முதல் இந்திய உப்பு நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், முதல் கட்டமாக 20,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் உப்பினை சந்தையில் விநியோகிப்பதன் மூலம், தற்போதைய உப்பு பற்றாக்குறை நீங்கும் என்றும், அதிகரித்துள்ள விலைகள் குறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, லங்கா உப்பு நிறுவனம் கூடுதலாக 10,000 மெட்ரிக் டன் உப்பை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த உப்புத் தொகுதி மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையும் என அதன் தலைவர் டி.கே. நந்தன திலக தெரிவித்துள்ளார்.