Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

ஆசிரியர் அதிபர் மீதான வாள் தாக்குதல் குறித்து திருக்கோவில் கல்வி வலயம் கண்டனம்

Posted on May 25, 2025 by Admin | 207 Views

வன்மையாக கண்டிக்கிறோம்!!!

நேற்று (2025.05.23) எமது கல்லி வலயத்திற்குட்பட்ட கமு / திகோ / திருநாவுக்கரசர் வித்தியாலயத்தின் அதிபரும் ஆசிரியர் ஒருவரும், மிலேச்சமாக தாக்கப்பட்டு, கொடூரமாக வெட்டிக் காயப்படுத்தப்பட்ட சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது.

மாணவர்களுடைய கல்விக்காக தமது நேரத்தை அர்ப்பணித்து பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், மாணவர் மீது கொண்ட அக்கறை காரணமாக செயல்பாடுகளை முன்னெந்த தருணத்தில் இடம்பெரும் இச் சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், இத்தகைய வன் முறைகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதையும் வலியுறுத்துகிறோம்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடை பிரார்த்திப்பதுடன் இத்தகைய செயல்களுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக நின்று, பாதுகாப்பான கல்விச் சூழல் அமைய தேவையான ஒத்துழைப்பினை வழங்குமாறு அனைத்து தரப்புனரையும் கேட்டுக்கொள்கிறோம்.

இரா. உதயகுமார் ,வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் சகல உத்தியோகத்தர்களும் – வலயக் கல்வி அலுவலகம், திருக்கோவில்