Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

இலங்கை – அமெரிக்காவுக்கிடையிலான இரண்டாவது பேச்சுவார்த்தை நாளை மறுதினம்

Posted on May 25, 2025 by Hafees | 330 Views

இலங்கை – அமெரிக்காவுக்கிடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பான கலந்துரையாடல்கள் மே 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் வொவஷிங்டன், டி.சி.யில் நடைபெற உள்ளன.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தலைமையிலான ஒரு குழு, பேச்சுவார்த்தையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும்.

திட்டமிடப்பட்ட கூட்டங்களுக்கு முன்னதாக இந்தக் குழு அமெரிக்காவிற்குப் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தொடர்ச்சியான இராஜதந்திர ஈடுபாடு மற்றும் பொருளாதார உரையாடலை பிரதிபலிக்கும் இரண்டாவது சுற்று விவாதம் இதுவாகும்.

சர்வதேச வர்த்தகக் கொள்கை மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாக பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பின் பேரில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன