Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

நுவரெலியாவில் சீரற்ற வானிலை: பல இடங்களில் பனி மூட்டம், மின்சாரம் துண்டிப்பு

Posted on May 29, 2025 by Admin | 291 Views

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 71 குடும்பங்களைச் சேர்ந்த 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நேரத்தில், நுவரெலியா – பதுளை, நுவரெலியா – கண்டி மற்றும் நுவரெலியா – ஹட்டன் ஆகிய பிரதான வீதிகளில் ப்ளாக்பூல் சந்தி, வெண்டிகோனர், நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பனி மூட்டம் காணப்பட்டது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால், பாதிக்கப்பட்ட வீதிகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும், வாகனங்களின் முகப்பு விளக்குகளை இயக்குமாறும், போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், நோட்டன்பிரிஜ் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.