Top News
| உலக நம்பிக்கை பெற்ற தலைவர்களில் முதல் இடம் யாருக்கு? | | அக்கரைப்பற்று பொதுச் சந்தை சுத்தம் செய்யும் பணி ஆரம்பம் | | காசாவுக்கான 950 நிவாரண லாரிகள் இஸ்ரேல் அனுமதிக்காக காத்திருப்பு |
Jul 27, 2025

முச்சக்கரவண்டியுடன் எரிந்த சடலம் கஹவத்தையில் மர்மமான சம்பவம்!

Posted on May 30, 2025 by Admin | 96 Views

இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரமுல்ல – ரக்வானை பகுதியில், 61 வயதுடைய நபர் ஒருவர் முச்சக்கரவண்டியுடன் தீவைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீவைத்து கொலைசெய்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (மே 29) பிற்பகலில் இடம்பெற்றதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் இரத்தினபுரி – ரில்ஹேனவத்த பகுதியில் வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலும் தெரிவிக்கும்போது,

  • சடலம் தீயில் முற்றாக கருகி இருந்தது
  • முச்சக்கரவண்டியும் முழுமையாக தீக்கிரையாகி இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கஹவத்தை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.