Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம் அவசியம் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

Posted on May 30, 2025 by Hafees | 373 Views

உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதற்காக, இலங்கையில் புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம் அவசியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்காலிக விதிமுறைகள் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 240 பேர் கொண்ட அமைப்பின் யோசனை தொகுப்பு நேற்று (மே 29) அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

முந்தைய அரசாங்கங்களால் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டும், எந்த புதிய சட்டமும் உருவாக்கப்படாத நிலை தொடர்ந்துள்ளது. தற்போது, புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம் உருவாக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார்