Top News
| கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர் |
Aug 18, 2025

காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

Posted on June 2, 2025 by Admin | 67 Views

காத்தான்குடி நகர சபைக்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு, நேற்று (01.06.2025) ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில், நகர பிதா கௌரவ அல்ஹாஜ் எஸ். எச். அஸ்பரின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர், சட்டமுதுமாணி, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் றஊப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும், பிரதித் தலைவர் கலாநிதி கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ், பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் எம்.பி. சாலி நளீம், பிரதி நகர பிதா, காத்தான்குடி நகர சபையின் புதிய உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் விழாவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை பெற்ற இந்நிகழ்வு, புதிய நகர சபை உறுப்பினர்களின் பொதுப் பணியின் தொடக்கமாக அமைந்தது.