Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

இலங்கை நீண்ட தூர பேருந்துகளில் AI தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு

Posted on June 5, 2025 by Arfeen | 276 Views

பாதுகாப்பான வீதி போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் பங்களிப்பு கொண்ட நீண்ட தூரப் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் கண்காணிப்பு சாதனங்களை நிறுவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், வருகிற இரண்டு மாதங்களில் முதல்கட்டமாக 40 பேருந்துகளில் இந்த AI கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்படும் எனத் தெரிவித்தார்.

இலங்கையின் போக்குவரத்து அமைப்பில் மேம்பாடு அவசியம் என்ற உண்மையை ஏற்றுக்கொண்ட அமைச்சர், வீதிப் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு ஒரு முழுமையான செயல் திட்டத்தை அமைச்சகம் அமல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.