(அபூ உமர்)
மூதூர் வேதத் தீவு(மஜீட் கிராமம்) மக்களுக்கான பாலத்தினை அமைப்பதற்கான நடவடிக்கைகளை நெடுஞ்சாலைகள் அமைச்சு துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென நெடுஞ்சாலை போக்குவரத்து விமானத்துறை அமைச்சின் விவாதத்தில் கலந்து கொண்டு பாராளுமன்றத்தில் நேற்று(05.06.2025) உரையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 30 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் வேத்த்தீவு(மஜீட் கிராம)மக்களினை மீள்குடியேற்றம் செய்ததுடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் வேறதீவு ஆற்றினை கடந்து செல்வதற்கான பெரி சேவிஸூம் உருவாக்கப்பட்டது.
நான் கிழக்கு மாகாணத்தில் வீதி அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் இக்கிராமத்தின் உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. கடந்த அரசாங்க காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு மனுதாரர்களிடமிருந்து விலைமனுகோரப்பட்டு இப்பாலத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் ஆட்சி மாற்ற நடைபெற்று இவ்வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது. எனவே, இப்பாலத்தினை அமைப்பதற்கான நடவடிக்கைகளை நெடுஞ்சாலைகள் அமைச்சு துரிதப்படுத்துமாறு மக்கள் சார்பில் கேட்டுக்கொண்டார்.