Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தலைவர் ரஊப் ஹக்கீமுக்குமிடையிலான சந்திப்பு

Posted on June 7, 2025 by Admin | 372 Views

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அட்டாளைச்சேனை, பொத்துவில் மற்றும் இறக்காமம் பிரதேச சபைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற பிரதேச சபை உறுப்பினர்களுடன் ஒரு விசேட கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்துக்கு கட்சியின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அல்ஹாஜ் ரஊப் ஹக்கீம் அவர்கள் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட செயலாளரான ஏ.சி. சமால்டீன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பில், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் உள்ளூராட்சியை வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.