Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

ரணில் – தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு

Posted on June 10, 2025 by Hafees | 286 Views

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினர் இடையில் சந்திப்பு இன்று (10) இடம் பெற்றுள்ளது.

விக்கிரமசிங்கவின் அழைப்பின் பெயரில் அவரது ஃப்ளவர் வீதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஒத்துழைப்பது பற்றி உரையாடல் இடம் பெற்றதாக கூட்டணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க நாளை (11) ரஷ்யா செல்ல உள்ளதால் இந்த சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறிய கூட்டணி தரப்பு, உள்ளூராட்சி மன்ற விவகாரம் தவிர்த்த ஏனைய விடயங்கள் உரையாடப்பட்டனவா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டது