Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அதிபர் வேதன முரண்பாடுகள் பற்றி பிரதமருடன் கலந்துரையாடல்

Posted on June 12, 2025 by Admin | 125 Views

கல்வி அமைச்சில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களுக்கிடையே முக்கியமான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, வேதன முரண்பாடுகள், பதவி உயர்வுகள், மற்றும் அதிபர்களின் சேவையைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கேள்விகளுக்கு உடனடி தீர்வுகளை வகுக்க, மேற்கண்ட பிரச்சினைகளை விரைவாக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர், அதிகாரிகளுக்கு தெளிவான வழிமுறைகளை வழங்கியுள்ளார் எனவும், கல்வி அமைச்சம் அறிவித்துள்ளது.

இந்த சந்திப்பு, நீண்ட காலமாக நிலவிய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை நோக்கி முன்னேறுவதாகக் கருதப்படுகிறது