Top News
| பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் | | ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய மோசடி: பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை | | தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு |
Oct 16, 2026

2026 உலகக்கிண்ண கால்பந்து – நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

Posted on June 13, 2025 by Hafees | 580 Views

மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கிண்ண போட்டிக்காக நவீனப்படுத்தப்பட்டு 2026 மார்ச் 26, அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.

மேம்பட்ட காற்றோட்டம் உள்ளிட்ட அமைப்புடன் கூடிய புதிய ஹைபிரிட் ஆடுகளம் அமைக்கப்படுகிறது. மைதானத்தில் புதிய லாக்கர் அறைகள் கட்டப்படுகின்றன. லிஃப்ட், விருந்தோம்பல் பகுதிகள், பெரிய LED திரைகள், மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள், CCTV கண்காணிப்பு மற்றும் புதிய ஒலி அமைப்பு ஆகியவை நிறுவப்பட உள்ளன.

மேலும் மைதானத்தின் இருக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இந்த மைதானத்தில் 2026 உலகக் கிண்ண தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும்.

இந்த புதுப்பித்தல்கள் அஸ்டெகா மைதானத்தை உலகத் தரம் வாய்ந்த மைதானமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது