Top News
| வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் | | எரிபொருள் வவுச்சரில் மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி விளக்கமறியலில் |
Aug 18, 2025

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் , இஸ்ரேலில் அவசரநிலை

Posted on June 13, 2025 by Admin | 123 Views

ஈரானின் அணுசக்தி திட்டத்தை குறிவைத்து, இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்கள், ஈரான் மீது கடுமையான தாக்கம் ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தெஹ்ரானில் அமைந்துள்ள முக்கிய அணுசக்தி நிலையங்கள், இராணுவ தலைமையகங்கள் உள்ளிட்ட இடங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களால் இஸ்ரேல் தனது வான்வெளியை முற்றாக மூடியுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல் காட்ஸ், நாட்டில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். மேலும், “ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்குப் பிறகு, எங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது,” என அவர் எச்சரித்துள்ளதுடன் இஸ்ரேல் காட்ஸ் நாடு முழுவதும் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். 

மற்றொரு நடவடிக்கையாக, ஈரானின் தெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.