Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

இஸ்ரேல்-ஈரான் பதற்றம், இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

Posted on June 13, 2025 by Admin | 296 Views

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு வசித்து வரும் இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு சூழ்நிலை கடுமையாக மாறியிருப்பதை கருத்தில் கொண்டு, தற்போது இஸ்ரேலுக்குச் செல்ல திட்டமிட்டு இருப்பவர்கள் தங்களது பயணங்களை பிற்போட வேண்டுமென அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் முழுவதும் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விமான சேவைகள் இஸ்ரேலும் ஈரானிலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்கள் தங்களுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பாதுகாப்பாகக் கையிலிருக்க வைத்துக்கொள்ள வேண்டும் என தூதுவர் நிமால் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.