Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தியின் மூன்றாவது மின் பிறப்பாக்கி இன்று இரவு நிறுத்தம்

Posted on June 13, 2025 by Admin | 363 Views

நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கியில் அவசர திருத்தப்பணிகள்மேற்கொள்ளப்படுவதால், இன்று நள்ளிரவு முதல் செயலிழக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இவ்வகை பணிகள் முழுமையாக முடிவடைய ஒரு மாதம் ஆகும் என மின்சார சபையின் ஊடக பேச்சாளர் தம்மிக விமலர்தன தெரிவித்துள்ளார்.

இந்த பிறப்பாக்கியின் செயல்பாடு இடைநிறுத்தப்படுவதால், தேசிய மின் கட்டமைப்புக்கு 300 மெகாவோட் மின்சார பங்களிப்பு இழப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் பொதுமக்களுக்கான மின் விநியோகத்தில் எந்தவித தடையும் ஏற்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிறப்பாக்கிகள் மற்றும் மாற்றுத் தொழில்நுட்பங்களின் மூலம் நிலைமை சீராகக் கையாளப்படும் என்றும் சபை விளக்கியுள்ளது.