(அபூ உமர்)
இறக்காம நீதிமன்றம் தொடர்பாக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விபரங்களை வெளியிடுமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் திரு ஹர்ஷன நானயக்கார தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தில் 17.06.2025 ஆம் திகதி நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் …..
நீதி அமைச்சின் சென்ற ஆலோசனைக் கூட்டத்தில் என்னால் இறக்காம பிரதேசத்திற்கான நீதிமன்றம் அம்பாறை சிங்கள மொழி நீதிமன்றத்தில் இருந்து அக்கரைப்பற்று நீதிமன்றத்துக்கு மாற்றுங்கள் அல்லது இறக்காம பிரதேசத்திற்கான தனியான நீதிமன்றம் ஒன்றை உருவாக்குங்கள் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டன.
இறக்காம நீதிமன்றம் விடயமாக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விபரங்களை இக்கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களின் கோரிக்கை தொடர்பாக பதில் அளித்த நீதி அமைச்சர் ….
இறக்காம நீதிமன்றம் தொடார்பான அறிக்கையை அமைச்சின் அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சின் உதவிச் செயலாளருக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார பணிப்புரை வழங்கினார்