Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 14, 2026

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து ஆலோசகராக லசித் மாலிங்க நியமனம்

Posted on December 30, 2025 by Admin | 542 Views

இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக முன்னாள் நட்சத்திர வீரர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாலிங்கவின் சேவைக்காலம் டிசம்பர் 15 முதல் 2026 ஜனவரி 25 வரை குறுகிய கால அடிப்படையில் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரை முன்னிட்டு இலங்கை அணியைச் சிறப்பாகத் தயார்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.