Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளருக்கும் – சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

Posted on June 19, 2025 by Hafees | 132 Views

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் பிம்ஸ்டெக் (Bengal Initiative for Multi-Sectorial Technical and Economic Cooperation) (BIMSTEC) பொதுச் செயலாளர் நாயகம் தூதர் இந்திரா மணி பாண்டே ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு இன்று (19) சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

இந்த சந்திப்பு பல்வேறு BIMSTEC முயற்சிகளின் கீழ் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட முக்கிய ஒத்துழைப்புத் துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டின் இலவச சுகாதார அமைப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளை முன்னேற்றுவதற்கான அரசாங்கத்தின் புது முயற்சிகளுக்கு பொதுச் செயலாளர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும், மேற்கத்திய மற்றும் உள்நாட்டு மருத்துவத் துறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை மேம்படுத்த BIMSTEC மற்றும் இலங்கைக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பின் முக்கியத்தை தெரிவித்தார்.

பிம்ஸ்டெக் இன் முயற்சிகளுக்கும் ஒத்துழைப்புக்கும் மற்றும் பங்களிப்புகளுக்கும் அதன் பொதுச்செயலாளர், தூதர் அம்ப் இந்திரா மணி பாண்டே மற்றும் அவரது ஊழியர்களுக்கு சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி நன்றி களை தெரிவித்தார்.

பிம்ஸ்டெக் BIMSTEC குழுவில் 7 நாடுகள் அடங்கும் அவை பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான் மற்றும் நேபாளம் ஆகும்