Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

டெக்சாஸில் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடிப்பு – சோதனை மீண்டும் தோல்வி

Posted on June 19, 2025 by Hafees | 264 Views

அமெரிக்காவின் டெக்சாஸில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் சோதனையின்போது வெடித்துச் சிதறியதனால் அப்பகுதியில் பெரும் தீப்பிழம்பு உருவானதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஸ்டார்ஷிப் என்பது விண்வெளிப் பயணம் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ராக்கெட் ஆகும்.

அமெரிக்கப் பணக்காரர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை தோல்வியடைவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு பலமுறை ராக்கெட் ஏவுதல் சோதனைகள் தோல்வியடைந்துள்ளன.