Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

இலங்கைக்கு 14,000 கார்கள் இறக்குமதி

Posted on June 20, 2025 by Hafees | 258 Views

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட பெப்ரவரி 1ம் திகதி முதல் நாட்டிற்கு 14,000 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 165 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட தெரிவித்தார்.

கடந்த காலகட்டத்தில் இலங்கை சுங்கத்துறை ரூ. 900 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது என்றும், இந்த ஆண்டும் அதன் வருவாய் இலக்குகளை அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.

ஈரான்-இஸ்ரேல் போரினால் நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இதுவரை பாதிக்கப்படவில்லை என்றும், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் முன்பு போலவே நாட்டிற்கு வந்து கொண்டிருப்பதாக இலங்கை சுங்கத்துறை மேலும் கூறுகிறது.