இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கர் ஒன்றை கைபேசியில் வைத்திருந்தது காரணமாகத் கைது செய்யப்பட்ட ஸுஹைல் என்பவரைத் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தும் நோக்கில், தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை (OIC) இன்று (27.06.2025) சந்தித்ததாக தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினர் அர்க்கம் முனீர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, சட்டத்தரணிகள் இல்ஹாம் ஹஸனலி மற்றும் அஸாம் நிஸ்மி ஆகியோரும் அவருடன் இருந்தனர்.
அதில், ஸுஹைல் கடந்த ஒன்பது மாதங்களாக ஜனநாயகத்துக்கு எதிரான செயல்கள் தடுக்கும் சட்டம் (PTA) கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் கைதானதற்கான காரணம் அவருடைய கைபேசியில் இருந்த “இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கர்” என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஸுஹைலை விடுவிக்கவோ அல்லது தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கவோ சட்டமா அதிபரின் ஆலோசனை தேவையாகும் நிலையில், கடந்த ஆறுமாதமாக அந்த அலுவலகத்திலிருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற சட்ட விரோதமான மற்றும் அநியாயமான கைது சம்பவங்களை எதிர்த்து, உரிய அதிகாரிகளுடன் இணைந்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுப்பினர் அர்க்கம் முனீர் தெரிவித்தார்.