யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாவது கட்ட அகழ்வுப் பணி இன்று 12ஆவது நாளாக தொடர்கிறது. இன்றுவரை மொத்தமாக 47 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அகழ்வு நடைபெறும் இடத்திற்கு அண்மையில் ட்ரோன் காட்சிப்பதிவுகள் மற்றும் தரைமட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக புதிதாக சில பகுதிகளில் அகழ்வுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. அந்த இடத்திலும் கூடுதல் சான்றுகள் மற்றும் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.மேலும், இன்று JCB இயந்திரத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் கூடுதல் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அகழ்வுப் பணிகள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்களின் நேரடி மேற்பார்வையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவின் பங்கேற்புடன் நடைபெற்று வருகின்றன.அக்குழுவின் பரிசோதனைகள் மற்றும் அறிக்கைகள் எதிர்காலத்தில் இந்த புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.