Top News
| அரச நிறுவனத் தலைவர்களுடன் தவிசாளர் முஷாரப்பின் முக்கிய கலந்துரையாடல் | | மார்க்ஸ்மேன் மின்னொளி கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தினை பறக்கவிட்ட ஒலுவில் ஈஸ்டர்ன் வோரியர்ஸ் அணி | | டேட்டிங் செயலி மூலம் ஏமாற்றி நிர்வாண வீடியோவால் மிரட்டிய 5 பேர் கைது |
Jul 7, 2025

பாலமுனை இளைஞர்களால் அட்டாளைச்சேனை பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத் கௌரவிப்பு

Posted on July 6, 2025 by Admin | 90 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட பாறுக் நஜீத் அவர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு, பாலமுனை இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டில் நேற்று (ஜூலை 5) அவரது இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது, பாலமுனை இளைஞர்கள் சபையின் ஆலோசகரும் விரிவுரையாருமான டாக்டர் A.H.M. றிபாஸ், உரையாற்றியபோது,

“இலங்கை வரலாற்றில் மிகவும் இளம் வயதில் உதவித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட நபராக பாறுக் நஜீத் அவர்கள் அடையாளம் காணப்படுகிறார்.

இது பாலமுனை மண்ணுக்கும் முழு அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கும் பெருமை. இச்சாதனையை சாத்தியமாக்க உதவிய முன்னாள் அமைச்சர் கௌரவ A.L.M. அதாஉல்லா அவர்களுக்கு கட்சி பேதமின்றி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்,” எனக் கூறினார்.

அதைத் தொடர்ந்து உரையாற்றிய பாறுக் நஜீத் அவர்கள்,

“தன்னை நம்பி வாக்களித்த மக்கள், இளைஞர்கள், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மற்றும் பாலமுனை மத்திய குழுவினருக்கு நன்றி தெரிவித்ததுடன் கட்சி பேதமின்றி, முழு அட்டாளைச்சேனை மக்களுக்கும் என் பங்களிப்பை வழங்க உறுதியளிக்கிறேன்,” என உரைத்தார்.

இந்த நிகழ்வில் இளைஞர்கள் சபையின் தலைவர் ஆசிரியர் A.L.M. சீத், ஆலோசகர் டாக்டர் றிபாஸ், நிர்வாக உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்