Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

வாகன வருமான அனுமதிப்பத்திரம் ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் 

Posted on July 6, 2025 by Admin | 345 Views

இணையத்தின் மூலம் வழங்கப்படும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள், தற்காலிகமாக செயலிழந்துள்ளன என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது.

இந்த சேவைகள் ஜூலை 3ஆம் திகதி முதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்படவில்லை என்று ICTA வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சேவை ஜூலை 9ஆம் திகதி வரை இயங்காமல் இருக்கக்கூடும். தற்போது இந்த தொழில்நுட்ப சிக்கலுக்கு தீர்வு காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன,”

என ICTA தெரிவித்துள்ளது.

மேலும், சேவைகள் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் போது, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன உரிமத்தை இணையவழியாக புதுப்பிக்க திட்டமிட்டு இருந்த பொதுமக்கள், இந்த தற்காலிக இடைஞ்சலை கருத்தில் கொண்டு, தங்கள் நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது