2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரத் தாக்குதல்களுக்கு முன்பே சிவநேசதுரை சந்திரகாந்தன், “பிள்ளையான்”,எனும் புனைப்பெயரையுடையவர் இந்தத் தாக்குதல்கள் குறித்து தெரிந்திருந்ததாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது:
“மட்டக்களப்பு சிறையில் இருந்தபோது பிள்ளையான் இந்தத் தகவல்களை முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. இது தற்போதைய விசாரணைகளின் ஒரு முக்கியக் கட்டமாகும்.”
250க்கும் மேற்பட்ட மனித உயிர்களை பறித்த இந்த ஒருங்கிணைந்த குண்டுத் தாக்குதல் சம்பவத்தினை பிள்ளையான் தாக்குதலுக்கு முன்பே தகவல் அறிந்துருந்தார் என்ற குறிப்பு விசாரணையில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.
அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்டுள்ள இந்த தகவல், தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் கூறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.