Top News
| யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு | | அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் |
Oct 15, 2026

மீண்டும் ஒளிரும் மீனோடைக்கட்டு பாலமுனை வீதிகள்- தவிசாளர் உவைஸ் களத்தில்  

Posted on July 17, 2025 by Admin | 412 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட மீனோடைக்கட்டு தொடக்கம் பாலமுனை வரையிலான பல மின்கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த LED விளக்குகளின் இணைப்பு வயர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் துண்டிக்கப்படுவதால், கடந்த சில நாட்களாக அப் பகுதிகள் இரவின்போது முழுமையாக இருள் சூழ்ந்த நிலையிலேயே காணப்பட்டன.

இந்த நிலைமையை கவனத்தில் எடுத்த அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் கௌரவ A.S.M. உவைஸ் அவர்கள் இன்று நேரில் அப்பகுதிக்கு விஜயம் செய்து, மின் இணைப்புகளை மீண்டும் பழுது பார்க்கும் பணிகளை ஆரம்பிக்கச் செய்தார். பொதுமக்கள் பாதுகாப்பிற்கும், சாலைகளில் போக்குவரத்து வசதிக்கும் முக்கியத்துவம் அளித்த அவர், LED ஒளியை விரைவாக ஒழுங்கமைக்க அதிகாரிகளை வழிநடத்தினார்.

இக் களப்பணியில், பிரதேச சபை உறுப்பினர் கெளரவ A.C. நியாஸ், பிரதேச சபை செயலாளர் L.M. இர்பான் ஆகியோரும் கலந்து கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

மக்கள் பாதுகாப்பு மற்றும் பொது வசதிக்காக LED ஒளிக்கம்பங்களை பழுது பார்த்து மீண்டும் செயல்படுத்தும் இந்த முயற்சி, பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.