(அபூ உமர்)
பொத்துவில் பிரதேச அபிவிருத்தி மற்றும் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று (17.07.2025) பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. நஸீல் அவர்களின் ஏற்பாட்டில், அபிவிருத்தி குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தலைமையில் கூட்டம் நடைபெற, அரசாங்கத்தின் பலத்த நிர்வாகப் பிரதிநிதித்துவத்துடன் முக்கிய பிராமுகர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித், கே. கோடிஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப், பிரதித் தவிசாளர் ஏ. மாபிர், முன்னாள் தவிசாளர் எம்.எச். ரஹீம், முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.பி. பதுர்கான், உதவி பிரதேச செயலாளர் எம். ராமக்குட்டி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பல திணைக்களத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள், பொதுமக்கள் தேவைகள், உள்ளூராட்சி நிர்வாக ஒத்துழைப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த கூட்டத்தில் விரிவாக அலசப்பட்டன.