பிறந்து இரு நாட்களே ஆன சிசு ஒருவர் 2025 ஜூலை 17ஆம் திகதி வயல் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இச் சம்பவம் தொடர்பாக, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், நேற்று (ஜூலை 18) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது, பிறப்புச் சான்றிதழ்களில் பெற்றோரின் திருமணப் பதிவு விவரத்தைச் சேர்ப்பது கட்டாயமல்ல எனத் தெளிவுபடுத்தினார்.
மேலும், குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயரை பதிவு செய்வது கட்டாயம் அல்ல என்றும், இது தொடர்பான நடைமுறைகளை சீரமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.