Top News
| இந்தோனேசியாவில் லெவோடோபி எரிமலை வெடிப்பு – மக்கள் அவதானத்தில்! | | அட்டாளைச்சேனை திண்மக்கழிவு சேகரிப்பு முகாமைத்துவ நிலையத்தில் தீ விபத்து | | தவிசாளர் உவைஸினால் அட்டாளைச்சேனையில் திறந்து வைக்கப்பட்ட AZAAZ Rice Stores |
Aug 2, 2025

நாட்டின் பாடசாலைகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்

Posted on July 24, 2025 by Admin | 139 Views

இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நாட்டின் கல்வி அமைப்பின் தற்போதைய நிலைமை குறித்து அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

அவர் தெரிவித்ததாவது,

  • நாட்டின் 98 பாடசாலைகளில் ஒரே ஒரு மாணவரும் இல்லை.
  • 115 பாடசாலைகளில் 10 மாணவர்கள் கூட இல்லை.
  • 20 மாணவர்கள் இற்கும் குறைவாக உள்ள பாடசாலைகள் 406.
  • 30 மாணவர்களுக்கு கீழ் உள்ள பாடசாலைகள் 752.
  • 40 மாணவர்களுக்கு கீழ் உள்ளவை 1141,
  • 50 மாணவர்களுக்கு கீழ் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் அடிப்படையில், நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15% இல் 50க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே கல்வி கற்கின்றனர். மேலும், 100 மாணவர்களுக்கும் கீழ் உள்ள பாடசாலைகள் 3144 எனவும் தெரிவிக்கப்பட்டது.

  • குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள்
  • பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள்
  • திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்கள்

இதனூடாக மனித வளம் மற்றும் நிதி வீணாகும் நிலை தொடர்கின்றது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து, சில பாடசாலைகளை மூட வேண்டிய அவசியம், சிலவற்றை இணைக்க, மேலும் சில புதிய பாடசாலைகள் கட்ட வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.