Top News
| வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் | | எரிபொருள் வவுச்சரில் மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி விளக்கமறியலில் |
Aug 18, 2025

அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக சபை அறிவுப்பு

Posted on July 27, 2025 by Admin | 96 Views

அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2025ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை, (ஜூலை 25) மாலை, பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நிகழ்வு, இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.ஆர். ரியாஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில், பிரதேச செயலாளர் ஏ.சி. அகமட் அப்கர், உதவி பிரதேச செயலாளர் எப். நஹிஜா முசாபிர், மாகாண உதவிப் பணிப்பாளர் சுசந்த, ஓய்வு பெற்ற மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி மஜீத் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

புதிய நிர்வாக சபை விவரம்:

  • தலைவர்: ஏ.சி.எம். ரிப்கான்
  • செயலாளர்: ஏ.ஆர். ரியாஸ்
  • பொருளாளர்: என்.எம். பாகிர்
  • அமைப்பாளர்: எஸ்.எம். ரசாத்
  • உப தலைவர்: எம்.ஆர். அர்ஹம்
  • உப செயலாளர்: ஏ.எல்.எம். அர்தாத்
  • உப அமைப்பாளர்: எஸ்.எல். அஷ்மல்

செயற்பாட்டு குழு பொறுப்பாளர்கள்:

  • விளையாட்டு: ஆர்.எம். அஸாம்
  • கலை, கலாச்சாரம்: என். நிப்லான்
  • முயற்சியான்மை: ஆர். ஹனாஸ்
  • ஊடகம் மற்றும் தகவல்: ஆர்.எம். ரிஸான்
  • தேசிய சேவை: ஏ.எப். சம்ஹா
  • கல்வி, பயிற்சி, தொழில் ஆலோசனை மற்றும் வழிநடத்தல்: எம்.என். ரிப்கி
  • நிதி: ஏ.பி.எம். இல்ஹாம்
  • சூழல் பாதுகாப்பு: எம்.ஆர். சம்ரி அஹ்மத்
  • கணக்காளர்: எம்.ஆர். ரிஸ்கி அஹ்மத்

ஒழுக்காற்று குழு உறுப்பினர்கள்:

  • எம்.எச். அப்துல் பாரி
  • ப. பாத்திமா பஸ்மிலா
  • எம்.ஜே.எம். சக்கி
  • ஐ.எம். ஆதில்
  • ஏ.எல்.எம். சீத்

புதிய நிர்வாக சபை அறிவிக்கப்பட்டதும், அதிதிகள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், நியமிக்கப்பட்ட புதிய தலைவர் தனது கண்ணி உரையை ஆற்றினார். நிகழ்வு ஸலவாத்துடன் நிறைவுபெற்றது.